தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3,000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 4,000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.
இதற்காக ரூ. 140 கோடி நிதி ஒதுக்க ஆளுநரிடம் முதல்வர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நிதிச்சுமை காரணமாக ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து இன்று பிற்பகல் ஆளுநரை முதல்வர் ரங்கசாமி சந்தித்துப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3,000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் 3.40 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ. 3,000 பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. ஆனால், பொங்கல் முடிந்த பிறகு ரேசன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ. 3,000 வரவு வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.