விஜய்யிடம் பொங்கலுக்குப் பின் மீண்டும் விசாரணை :
புது தில்லி: பொங்கல் பண்டிகைக்குப் பின் மீண்டும் விசாரணைக்கு ஆஜராவதாக சிபிஐயிடம் முன்வைக்கப்பட்ட விஜய் தரப்பின் கோரிக்கையை சிபிஐ ஏற்றுக்கொண்டதாகவும், இதையடுத்து செவ்வாய்க்கிழமை(ஜன. 13) விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராக வேண்டாமெனவும், பொங்கல் பண்டிகைக்குப் பின் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, கடந்த செப். 27-ஆம் தேதி கரூா் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவா் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக, திங்கள்கிழமை (ஜன.12) நேரில் ஆஜராகுமாறு தவெக தலைவா் விஜய்க்கு சிபிஐ தரப்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று விசாரணைக்கு ஆஜராகிய விஜய்யிடம் சுமார் 7 மணி நேரம் சுமார் 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் அளித்துள்ள பதில்கள் ஆவணப்படுத்தப்பட்டு அவரிடம் கையொப்பம் பெறப்பட்டிருப்பதகவும் அவர்கள் தெரிவித்தனர்.
விசாரணையை முடித்துக்கொண்டு விஜய் தில்லியிலுள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. நாளை அவர் சென்னைக்குத் திரும்புவார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, பொங்கல் பண்டிகைக்குப் பின் மீண்டும் விசாரணைக்கு ஆஜராவதாக சிபிஐயிடம் முன்வைக்கப்பட்ட விஜய் தரப்பின் கோரிக்கையை சிபிஐ ஏற்றுக்கொண்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. விசாரணை தேதி பின்னர் அவருக்கு தெரியப்படுத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.