திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஜனவரி 19 ஆம் தேதி முதல் விரிவான சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய பயணத்திற்கான தேர்தல் அறிக்கை என்பது வெறும் காகிதமாக மட்டுமல்லாமல், மக்களின் குரலாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சாதனைகளின் தொடர்ச்சியாக, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான வளர்ச்சியைத் திட்டமிட 'திராவிட மாடல் 2.0' தயாராகி வருகிறது. இந்த புதிய பயணத்திற்கான தேர்தல் அறிக்கை என்பது வெறும் காகிதமல்ல; அது மக்களின் குரலாக இருக்க வேண்டும் என்ற முதவரின் விருப்பத்தின்படி, ஒவ்வொரு தமிழ்நாட்டு குடிமகனின் தேவையையும் பிரதிபலிக்கும் வகையில், மக்கள் பங்கேற்புடன்கூடிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் அறிக்கையை உருவாக்க தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு தயாராகி வருகிறது.
2026 சட்டப் பேரவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஜனவரி 19 ஆம் தேதி தொடங்கி தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, எம்.பி., தலைமையில் டி.கே.எஸ்.இளங்கோவன், முனைவர் கோவி.செழியன், முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், முனைவர் டி.ஆர்.பி. ராஜா, எம்.எம். அப்துல்லா, பேரா. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மருத்துவர் எழிலன் நாகநாதன், கார்த்திகேய சிவசேனாபதி, திருமதி. ஆ.தமிழரசி ரவிக்குமார், ஜி.சந்தானம் ஐ.ஏ.எஸ், சுரேஷ் சம்பந்தம் ஆகிய 12 அடங்கிய குழு பயணம் செய்து பொதுமக்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளைக் கேட்கவிருக்கிறது.
மாவட்ட வாரியாக வணிகர் சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், நெசவாளர்கள், மீனவ சங்கங்கள், தொழிற்சங்கங்கள், தொழில் முனைவோர், மாணவர் சங்கங்கள், கல்வியாளர்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் அழைத்து வந்து திமுக தேர்தல் அறிக்கைக் தயாரிப்புக்குழுவினரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.