காங்கிரஸ் மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ளார்.
மைசூரில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு இன்று(ஜன. 13) பிற்பகல் 3 மணியளவில் நீலகிரி மாவட்டத்தின் கூடலூருக்கு வந்துள்ளார்.
கூடலூரில் காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். கூடலூரில் இன்று மாலை நடைபெறும் தனியார் பள்ளியின் நூற்றாண்டு விழா நிகழ்வில் ராகுல் காந்தி கலந்துகொள்கிறார்.
இதன்பின்னர் மீண்டும் மைசூருவுக்கு புறப்படுகிறார்.
சற்று முன்னதாக ராகுல் காந்தி, தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.
ஜன நாயகன் திரைப்படத்துக்கான தணிக்கைச் சான்றிதழை வழங்காமல் மத்திய அரசின் தணிக்கை வாரியம் தாமதப்படுத்தி வரும் நிலையில், அந்தப் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ராகுல் காந்தி விஜய்க்கு ஆதரவாக,
"ஜன நாயகன்’ திரைப்படத்தைத் தடுக்கும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் முயற்சி, தமிழ் கலாச்சாரத்தின் மீதான ஒரு தாக்குதலாகும்.
தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் நீங்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டீர்கள் மோடி” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் இந்த பதிவு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.