எந்தவொரு பிரதமரும் இப்படி செய்யமாட்டார்! - ராகுல் காந்தி கடும் விமர்சனம்
இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்...
எந்தவொரு பிரதமரும் இப்படி செய்யமாட்டார் என இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மக்களவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று(புதன்கிழமை) உரையாற்றினார்.
இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து கடுமையாக சாடிய அவர், பிரதமர் மோடி இந்த நாட்டை அமெரிக்காவிடம் விற்றுவிட்டதாகப் பேசினார். மேலும், தங்களை ஊழியர்கள் போல நடத்தக்கூடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பதிலளிக்கும் வகையில் பல்வேறு விஷயங்களைப் பேசினார்.
Advertisement
Advertisement
தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,
"ஹர்தீப் சிங் புரி மற்றும் அனில் அம்பானி பெயர்கள், எப்ஸ்டீன் கோப்புகளில் உள்ளன. அதானிக்கு எதிரான ஒரு வழக்கில் ஒரு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 18 மாதங்களாக மத்திய அரசு அதற்கு பதிலளிக்கவில்லை. இந்த விஷயத்தில் பிரதமருக்கு நேரடியாக அழுத்தம் இருக்கிறது. இல்லையெனில் இப்படி செய்திருக்கமாட்டார்.
முக்கிய விஷயம் என்னவென்றால், ஒரு சாதாரண சூழ்நிலையில்கூட எந்த பிரதமரும் இதைச் செய்யமாட்டார்கள். அதாவது நாட்டின் தரவுகள், விவசாயிகள், எரிசக்தி பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பை கருத்தில் எடுத்துக்கொள்ளும் எந்தவொரு பிரதமரும் இப்படி செய்யமாட்டார். அவர்கள் மீது ஒரு பிடிப்பு இருக்கும்போது மட்டுமே, அவர்களுக்கு பலன் இருக்கும்போது மட்டுமே இப்படி செய்ய முடியும்" என்று கூறினார்.
no PM would do this in a normal situation: Rahul gandhi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.