முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கோப்புப் படம்
தமிழ்நாடு

போடி தொகுதியில் போட்டி? ஓபிஎஸ் பேட்டி!

பேரவைத் தேர்தலில் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி குறித்த விரைவில் அறிவிப்பதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு செய்தியாளர்களிடம் பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், "தை பிறந்தால் வழி பிறக்கும். இன்றுதான் பிறந்திருக்கிறது. இந்த மாதத்தில் 30 நாள்கள் உள்ளன.

ஏதேனும் ஒரு நல்ல நாளில் அறிவிப்பேன். போடி தொகுதியில் போட்டியிடுவது குறித்து மக்கள் முடிவு செய்வார்கள்" என்று தெரிவித்தார்.

தேர்தலில் யாருடன் கூட்டணி என்று தேமுதிக அறிவிப்பதாய் இருந்த நிலையில், மற்றவர்களின் கூட்டணி அறிவிப்பு வெளியானவுடன், தாங்களும் கூட்டணி அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் கூட்டணி அறிவிப்பைக் காலந்தாழ்த்தியுள்ளார்.

Former CM O Panneerselvam said that he will soon announce the alliance in the elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கடல் எல்லையில் பாக். மீனவர்கள் 9 பேர் கைது

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம்: வர்த்தகச் செயலாளர்

அடுத்த 6 நாள்களுக்கு வறண்ட வானிலை நிலவும்!

மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்!

ஈரானில் உள்ள இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம்!

SCROLL FOR NEXT