தை மாதம் முடிவதற்குள் கூட்டணி குறித்த முடிவு அறிவிக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது.
அந்த வகையில் திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, தவெக, நாதக என 4 முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் சமீபத்தில் அன்புமணியின் பாமக, டிடிவி தினகரனின் அமமுக இணைந்த நிலையில் கூட்டணி வலுப்பெற்று வருகிறது.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று கூறிவந்த டிடிவி தினகரன், இபிஎஸ்ஸுடன் உள்ள கருத்து மோதலை பொருட்படுத்தாது என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளார்.
இதையடுத்து ஓபிஎஸ் எந்த கூட்டணியில் இணைவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
'தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அழைப்பு வந்ததா?' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு ஓபிஎஸ் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
கூட்டணி குறித்த கேள்விக்கு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வருகிற 25 ஆம் தேதி நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பின் முடிவை அறிவிப்பேன் எனவும் கூட்டணி ' குறித்து தை முடிவதற்குள் உரிய பதில் கிடைக்கும் எனவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.