முகப்பு
தமிழ்நாடு

தமிழக மக்களுக்கு திருவள்ளுவர் நாளில் முதல்வர் ஸ்டாலின் அளித்த 4 வாக்குறுதிகள்!

திருவள்ளுவர் நாளில் முதல்வர் ஸ்டாலின் 4 வாக்குறுதிகள் அளித்துள்ளதைப் பற்றி...

Updated On : 16 ஜனவரி, 2026 at 3:31 AM
திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்.
பகிர்:

திருவள்ளுவர் நாளில் முதல்வர் ஸ்டாலின் 4 வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “வான்புகழ் வள்ளுவரைப் போற்றும் இந்தத் திருவள்ளுவர் நாளில், தமிழ்நாட்டு மக்களுக்கு நான் நான்கு முக்கிய வாக்குறுதிகளை அளிக்கிறேன்!

அஞ்சாமை மனிதநேயம் அறிவாற்றல் ஊக்கமளித்தல் - வள்ளுவன் சொன்ன இவை நான்கும் நமது ஆட்சியின் அடிநாதம்!

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு - திருவள்ளுவர்

  • சமூக அநீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் துணிச்சல்.

  • வறியோர் எளியோர் வாழ்வுயர மனிதநேயத் திட்டங்கள்.

  • இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள்.

  • தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப் பணிகள்.

இவை நான்கும் தமிழ்நாட்டில் தொடரும் என்பது இந்த திருவள்ளுவர் தினத்தில் உங்களுக்கு நான் தரும் வாக்குறுதி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →