நாகை மாவட்டம், வேதாரண்யத்தின் பல்வேறு இடங்களில் திருவள்ளுவர் நாளைக் கொண்டாடும் வகையில் திருவள்ளுவர் சிலைகளுக்கு வெள்ளிக்கிழமை (ஜன. 16) மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தேத்தாகுடி வடக்கு, அரக்கரை பகுதியில் நிறுவப்பட்டுள்ள சிலைக்கு திருவள்ளுவர் தமிழ்ப் பேரவையின் சார்பாக திருவள்ளுவர் நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
பின்னர், அங்குள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி முன்னாள் தலைவர்கள் ஆர்.கிரிதரன், சோமசுந்தரம், பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர்கள் இள. தொல்காப்பியன், திருமாறன், இளஞ்செழியன், மணிக்கண்ணன், ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினர் கோபிநாதன் உள்ளிட்ட தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு, ஆசிரியர் கண்ணன் நன்றி தெரிவித்தார்.
மருதூர் வடக்கு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினர் தனலட்சுமி அருணன் ரோட்டரி சங்க நிர்வாகிகள் இலக்குவன், அண்ணா துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (இந்து) வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு ஆசிரியர்கள் மற்றும் ஆர்வலர்கள் மாலை அணிவித்தனர்.
இதேபோல், வேதாரண்யம் வடக்கு வீதி , ஆயக்காரன்புலம் வள்ளுவர் சாலை, மருதூர் வடக்கு ராஜாபுரம், வாய்மேடு உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைகளுக்கு மலர் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.