பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று(ஜன. 21) முதல் 3 நாள்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 23) நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
பிரதமரின் சென்னை வருகையை முன்னிட்டு, தில்லியில் இருந்து எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்புப் படை குழுவின் கூடுதல் இயக்குநர் அமி சந்த் யாதவ் தலைமையில் ஒரு குழுவினர் சென்னை விமான நிலையம் வந்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஜன.23) சென்னை வருவதை முன்னிட்டு, சென்னை விமான நிலைய பகுதி முழுவதும் வருகிற 23-ஆம் தேதி வரை சிறப்பு பாதுகாப்பு படை பிரிவின் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக் கருதி செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று(ஜன. 21) முதல் ஜன. 23 ஆம் தேதி வரை 3 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.