தமிழக அரசு தலைமைச் செயலகம் 
தமிழ்நாடு

பதிவுத்துறை இணையதளம் இயங்காது! முன்கூட்டியே பயன்படுத்த அறிவுறுத்தல்!

இணையதள சேவைகளை முன்கூட்டியே பயன்படுத்த பதிவுத்துறை அறிவுறுத்தல்.

இணையதளச் செய்திப் பிரிவு

பராமரிப்பு மற்றும் ஸ்டார் 3.0 திட்டத்துக்கு தரமேம்பாடு செய்யப்பட இருப்பதால் இன்று(ஜன. 21) இரவு 7 மணியிலிருந்து நாளை காலை 11 மணி வரை பதிவுத்துறை இணையதளம்(Citizen Portal) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பதிவுப்பணிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

பதிவுத்துறை இணையதளம் https://tnreginet.gov.in மற்றும் ஸ்டார் 3.0 திட்டத்துக்கு தரமேம்பாடு செய்யப்பட இருப்பதால் ஜன. 21 ஆம் தேதி (புதன்கிழமை) இரவு 7 மணியிலிருந்து ஜன. 22 ஆம் தேதி வரை (வியாழக்கிழமை) காலை 11 மணிவரை பதிவுத்துறையின் இணையதளம்(Citizen Portal) செயல்படாது.

இருப்பினும் மேற்கூறிய இரண்டு நாள்களிலும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பதிவுப்பணிகள் வழக்கம் போல் செயல்படும்.

ஜன. 22-ல் பத்திரம் பதிவு செய்ய உள்ள பொதுமக்கள் மேற்படி குறிப்பிட்ட நேரத்தில் இணையதளம் (Citizen Portal) செயல்படாது என்பதைக் கருத்தில் கொண்டு இன்று இரவு 7 மணிக்குள் டோக்கன் எடுப்பது, ஆன்லைன் கட்டணம் செலுத்துவது, வில்லங்கச் சான்று மற்றும் சான்றிட்ட ஆவண நகல்களை பெறுவது போன்ற பதிவுத்துறையின் இணையதள சேவைகளை தங்கள் வசதிக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

The registration department advises to register in advance to use online services.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலிவுட் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ம.பி.யில் 27 டன் மாட்டிறைச்சி பறிமுதல் செய்த விவகாரம்! மேயருக்கு எதிராக பஜ்ரங் தள் போராட்டம்!

பங்காளிச் சண்டை! NDAவில் இணைந்த அமமுக! | செய்திகள் சில வரிகளில் | 21.01.26

வங்கதேசத்தின் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி..! அடுத்து என்னாகும்?

வரலாற்றை மாற்றும் அகழாய்வு அறிக்கையை வெளியிடுவதில் தடங்கல்! அமர்நாத் ராமகிருஷ்ணன்

SCROLL FOR NEXT