பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்) ANI
தமிழ்நாடு

பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மதுராந்தகம் புறப்பட்டார் மோடி!

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுராந்தகம் புறப்பட்டார் மோடி..

இணையதளச் செய்திப் பிரிவு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார்.

கேரளத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுராந்தகம் புறப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, 3 அம்ருத் பாரத் ரயில் சேவைகளைத் தொடங்கிவைத்து பல்வேறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் தமிழகத்துக்கு வந்த பிரதமர் மோடி தற்போது சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுராந்தகம் புறப்பட்டுள்ளார். இன்னும் சற்று நேரத்தில் அவர் பொதுக்கூட்ட மேடைக்கு வருவார் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. கூட்டணி கட்சியின் தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

PM Modi is going to Maduranthakam from chennai airport to attend NDA meeting

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயலலிதா, திருப்பரங்குன்றம், ஜல்லிக்கட்டு, தமிழ் கலாசாரம்... பிரதமர் மோடி பேச்சு!

நாள் முழுவதும் நீடிக்கும் மேக்-அப் டிப்ஸ்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் மாற்றம்!

இந்தியாவில் டி20 விளையாட மறுத்தால் வங்கதேசம் மீது கடும் நடவடிக்கை?

தொடரும் கரடிகளின் ஆதிக்கம்: சென்செக்ஸ் 770 புள்ளிகளுடன், நிஃப்டி 241 புள்ளிகளுடன் நிறைவு!

SCROLL FOR NEXT