முகப்பு
தமிழ்நாடு

விஜய்யுடன் கூட்டணியா? - நயினார் நாகேந்திரன் பதில்!

பாஜகவுடன் விஜய் கூட்டணி அமைக்கவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு நயினார் நாகேந்திரன் பதில்....

Updated On : 9 மார்ச், 2026 at 5:00 PM
நயினார் நாகேந்திரன். - கோப்புப் படம்
பகிர்:

தவெகவுடன் பாஜக கூட்டணி என ஒரு வதந்தி பரவிக்கொண்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாளை மறுநாள்(மார்ச் 11) திருச்சியில் மாநில மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

அதற்கான ஆலோசனைக் கூட்டம் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் தங்க கென்னடி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

Advertisement

தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசுகையில், "பாஜகவுடன் விஜய்யின் தவெக கூட்டணி என்றொரு வதந்தி பரவிக் கொண்டிருக்கிறது. விஜய்யை நாளை சிபிஐ விசாரணைக்கு அழைத்ததற்கும் பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து இன்னும் பேச்சுவார்த்தை நடக்கவில்லை.

தமிழகத்திற்கு மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி தமிழையும் தமிழ் மொழியையும் தமிழ் கலாசாரத்தையும் 5,000 ஆண்டுகள் பழமையானது என்று பேசியுள்ளார்.

சாத்தான்குளம் லாக்கப் மரணத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டையைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்தார். தற்போது 34 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளன. நாமக்கல்லில் இரண்டு வயது சிறுமி ரத்தக் கறையுடன் இறந்தார். யாருடைய ஆட்சிக் காலத்தில் இதுபோல் நடக்கிறது? இதற்கு தமிழக முதல்வர் என்ன சொல்லப் போகிறார்?" என்று தெரிவித்தார்.‌

summary

Is NDA alliance with TVK vijay: Nainar Nagendran reply

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.