பெண் ஊழியர்களின் 3ஆவது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் பி.மங்கையர்கரசி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, 3ஆவது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் அனைத்து துறை செயலாளர்களுக்கும் இந்த உத்தரவு நகலை அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.