தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் கூட்டணி குறித்து விஜய் உண்மைக் கதை ஒன்றை தனது தொண்டர்களுக்கு கூறினார்.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று(ஜன. 25) மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது:
அனைவரும் ஒற்றுமையாக இருந்து உழைக்க வேண்டும். அண்ணா தெரிவித்ததை அரசியலில் புகுந்த வேண்டும். அவர்களைப் பொறுத்தவரையில் வாக்குச் சாவடி என்றால் கள்ள ஓட்டு போடுகின்ற இடம்.
ஆனால் தவெகவுக்கு ஜனநாயகக் கூடம். அங்கு ஜனநாயகம் திருடப்படாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஓட்டையும் நாம் பாதுகாக்க வேண்டும். கட்சியைத் தாண்டி விஜய்கூட நிற்க மக்கள் தயாராகிவிட்டனர். நாம் அவர்களை விசில் சின்னத்துக்கு ஓட்டு போட வைக்க வேண்டும்.
தீய சக்தியோட ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்களுக்கு விஜய் பிடிக்கும்னா உங்களுடைய உழைப்பில் அதைக் காட்டுங்கள். உங்களுக்காக ஒரு உண்மைக் கதையைச் சொல்கிறேன்
சொந்த நாட்டிலே இருக்க முடியாத, நெருக்கடி நிலை ஒருவருக்கு ஏற்படுகிறது. வேறுவழியில்லாமல் நாட்டைவிட்டு வெளியேறி மலை, காடுகளில் மறைந்து வாழ வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அப்போது அவர் தனது நட்பு சக்திகளை திரட்டிக்கொண்டு, அதிரடியாக போரை நடத்தி அந்த நாட்டையே திரும்ப மீட்டெடுத்தது யார் தெரியுமா?
நமது கொள்கைத் தலைவர்களில் ஒருவரான ராணி வேலுநாச்சியார்தான். அவர்களுக்கு நட்பு சக்தியாக இருந்தது சின்ன மருது, பெரிய மருது, சையது கார்கி ஆகிய மூவரும்தான்.
ஆங்கிலயேர்களின் படை, ஆற்காட்டுப் படையை எதிர்த்து நாட்டை மீட்டெடுத்தார். நட்பு சக்தி இருந்தாலும், இல்லையென்றாலும் தனியாவு நின்று கெத்தாக ஜெயிக்கிற அளவிற்கு மிகப்பெரிய படை நமது படை உள்ளது” என்றார்
கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடவும் தயார் என்பதை விஜய் சூசகமாக தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.