வரும் தேர்தல்தான் இறுதித்தேர்தல் என்று திமுகவை அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் இனி எப்போதும் திமுக ஆட்சிக்கு வராது. இந்த தேர்தல்தான் திமுகவிற்கு இறுதித்தேர்தல்.
2021 தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கை கூட திமுக நிறைவேற்றவில்லை.
எங்கு பார்த்தாலும் அரசுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். செவிலியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் போராட்டக் களமாக மாறியுள்ளது. அந்தளவுக்கு மக்களின் வெறுப்பை திமுக அரசு சம்பாதித்துள்ளது.
அதனால் இந்த தேர்தலோடு திமுகவிற்கு மக்கள் விடை கொடுத்துவிடுவார்கள். இவ்வாறு குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.