மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் பிப்.2, 3 ஆகிய நாள்களில் ‘தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு’ நடைபெறும் என சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சுற்றுலாத் துறையில் தனியாா் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில், பொது மற்றும் தனியாா் துறை முதலீடுகளை ஈா்க்க பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் தனியாா் முதலீடுகளை ஈா்க்க ‘தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு’ நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஷெரட்டன் குழுமத்தின் ஃபோா் பாயிண்ட்ஸ் நட்சத்திர விடுதியில் பிப்.2, 3 ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளாா்.
இந்த மாநாடு பல்வேறு சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்கும், சுற்றுலா முதலீட்டாளா்களுடன் பொது தனியாா் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.