தைப்பூசத் திருவிழாவையொட்டி அரக்கோணம்-திருத்தணி இடையே நாளை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
அறுபடை வீடுகளில் 5 ஆம் படைவீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயில் ஆண்டுதோறும் தைப்பூச விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
காஞ்சிபுரம், வேலூர் திருவண்ணாமலை, ஆந்திர மாநிலம் திருப்பதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணி வந்து, தைப்பூச விழாவில் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபடுவர்.
இந்த நிலையில் தைப்பூசத் திருவிழாவையொட்டி பயணிகளின் வசதிக்காக, அரக்கோணம்-திருத்தணி இடையே நாளை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, 4 மின்சார சிறப்பு ரயில்கள் திருத்தணி வரை நீட்டிக்கப்பட்டு சிறப்பு ரயில்களாக இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.