அனிதா ராதாகிருஷ்ணன் கைது! இன்றைய செய்திகள் ஜூலை 3 - நேரலை
முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.
ஏர் இந்தியா எரிபொருள் கூடுதல் கட்டணம் குறைப்பு
தங்கம், வெள்ளி விலை உயர்வு!
கடந்த 3 நாள்களில் (ஜூலை 1) முதல் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 4,000 உயர்ந்துள்ளது.
அடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!
அமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வு
ஊத்துக்கோட்டை அருகே தனியாா் தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிவு சம்பவத்தில் மேலும் இருவா் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 18-ஆக உயர்ந்தது.
தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனை
வெனிசுவேலா நிலநடுக்கத்தில் 2,300 பேர் பலி! 7 நாள்களுக்கு துக்கம் அனுசரிப்பு
வெனிசுவேலாவில் நிலநடுக்கங்களால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக புதன்கிழமை (ஜூலை 1) மாலை 6 மணி தொடங்கி, 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
உங்கள் ஆசி வேண்டும்! 61 வயதில் நடிகர் ஆமிர் கான் 3-வது திருமணம்!
பொறுப்பு ஆளுநருக்கு பொறுப்பு வேண்டாமா? அமைச்சர் வன்னி அரசு கேள்வி
மதுரையில் தமிழக ஆளுநர் (பொறுப்பு) ஆர்.வி. ஆர்லேகர் ஆய்வு செய்ததற்கு அமைச்சர் வன்னி அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு சம்மன்: சு. வெங்கடேசன் எம்.பி. எச்சரிக்கை
மதுரையில் ஆளுநர் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு அழைப்பாணை விடுக்கப்படும் என சு. வெங்கடேசன் எம்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!
முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று(ஜூலை 3) கைது செய்யப்பட்டுள்ளார்.
கோயில்களில் முறைகேடு, லஞ்சம்! புகார் அளிக்க அமைச்சர் இ-மெயில் முகவரி வெளியீடு!
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் முறைகேடுகள், லஞ்சம் குறித்து புகார் அளிக்க அமைச்சரின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அனிதா ராதாகிருஷ்ணனிடம் விசாரணை!
முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம்
சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்! - ஸ்டாலின்
அதிமுகவிலிருந்து வைகைச்செல்வன் விலகல்!
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் விலகுவதாக அறிவித்துள்ளார்.
ரீல்ஸ் அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு உதயநிதி கண்டனம்
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாடெங்கும் சீர்கெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கக் காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதில் காட்டியிருக்கிறது சோஃபா மாடல் அரசு.
கரூர் சம்பவத்தில் ஆதவ் அர்ஜூனாதான் முக்கிய குற்றவாளி!
அதிக கட்டணம் கூடாது! தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை!
மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அமைச்சர் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சித்தராமையாவிடம் ஆசி பெற்ற சிவகுமார்!
விசாரணைக்கு ஆஜராகவில்லை! சிங்கப்பூரில் சிகிச்சை பெறும் எ.வ. வேலு!
6 வது நாளாக உண்ணாவிரதம்! சோனம் வாங்சுகின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு!
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி ஆர்வலர் சோனம் வாங்சுக் 6 ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.
மேக்கேதாட்டு விவகாரத்தில் கருத்துகள் முக்கியமில்லை! தமிழக காங்கிரஸ் எதிர்ப்புக்கு கர்நாடக அமைச்சர் பதில்!
மேக்கேதாட்டு விவகாரத்தில் தனிப்பட்ட கருத்துகளுக்கு முக்கியத்துவமில்லை என கர்நாடக உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியுள்ளார்.
முழு பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது? அமைச்சர் பதில்!
முழு பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்த பிறகு அறிவிக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.
கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு!
தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நடத்தி வரும் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளித்துள்ளது.
அதிமுகவில் நான் இருக்கிறேனா, இல்லையா; எனக்கே தெரியவில்லை: சி.வி. சண்முகம்
அதிமுகவில் நான் இருக்கிறேனா, இல்லையா என்பது எனக்கே தெரியவில்லை என்றார் முன்னாள் அமைச்சரும், மயிலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுமான சி.வி. சண்முகம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.