முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.

Updated On : 25 ஜூன் 2026, 4:15 pm IST
அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் சி.ஜோசப் விஜய்
பகிர்:
Updated On : 25 ஜூன் 2026, 4:15 pm IST

பலி எண்ணிக்கை 12

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 25 ஜூன் 2026, 2:49 pm IST

உரசினால் தீப்பிடிக்கும் ஷூ! எங்கு வாங்குவது? விலை எவ்வளவு?

தீக்குச்சியைக் கொண்டு உரசினால் தீப்பிடிக்கும் வகையிலான ஷூ, சந்தையில் அறிமுகமாகியுள்ளது.

Updated On : 25 ஜூன் 2026, 2:49 pm IST

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா கூகுள் பிக்சல் 11 ப்ரோ! சிறப்புகள் என்னென்ன?

பயனர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கூகுள் பிக்சல் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

வரும் ஆகஸ்ட் மாதம் கூகுள் பிக்சல் 11 ப்ரோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள சிறப்பம்சங்கள் மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச்செய்துள்ளது.

Updated On : 25 ஜூன் 2026, 11:33 am IST

செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் சோதனை

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பரும் அரசு ஒப்பந்ததாரருமான எம்.சி.எஸ். என்றழைக்கப்படும் எம். சி. சங்கர் வீட்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையினர் வியாழக்கிழமை காலை சோதனை நடத்தி வருகின்றனர்.

Updated On : 25 ஜூன் 2026, 11:32 am IST

டிக்கெட் எடுத்து பயணித்த முதல்வர் விஜய்

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பெரம்பூருக்குச் செல்லும் பேருந்தில் டிக்கெட் எடுத்து முதல்வர் ஜோசப் விஜய் பயணம் மேற்கொண்டார்.

Updated On : 25 ஜூன் 2026, 11:27 am IST

வெனிசுலாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

வெசுலாவில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டதால் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. முதலில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவான நிலையில், சில நிமிடங்களில் 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

Updated On : 25 ஜூன் 2026, 11:26 am IST

திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனா

திமுக அரசு செய்யாததை தவெக அரசு செய்து வருவதாக விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று (ஜூன் 25) தெரிவித்தார்.

Updated On : 25 ஜூன் 2026, 11:26 am IST

அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆலையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் உணவு மாதிரிகளை சோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.

Updated On : 25 ஜூன் 2026, 11:25 am IST

எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு!

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, முன்னாள் பொறியாளர்கள் உள்ளிட்ட 11 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவாகியுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. 2022ஆம் ஆண்டு சாலை விரிவாக்கம் தொடர்பாக சங்கரானந்த் இன்ப்ரா நிறுவனத்திற்கான டெண்டரில் முறைகேடு என புகார் அளித்துள்ளனர்.

Updated On : 25 ஜூன் 2026, 11:23 am IST

முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சமூக நீதி வணக்கம்! முதல்வர் விஜய்

Updated On : 25 ஜூன் 2026, 11:23 am IST

பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!

Updated On : 25 ஜூன் 2026, 11:22 am IST

முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்

Updated On : 25 ஜூன் 2026, 11:09 am IST

300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்த முதல்வர் விஜய்!

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, கோவை உள்பட 6 கோட்டங்களுக்காக 300 புதிய அரசுப் பேருந்துகளின் சேவைகளை முதல்வர் சி. ஜோசப் விஜய் வியாழக்கிழமை தொடக்கிவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments