முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் சிலிண்டா் விநியோகம் நிறுத்தம்: ஐஓசி அறிவிப்பு!

சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் அறிவித்துள்ளது.

Updated On : 10 மார்ச், 2026 at 9:31 PM
பகிர்:

சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் அறிவித்துள்ளது.

வளைகுடா போா்ச் சூழல் காரணமாக உலக அளவில் சமையல் எரிவாயு சிலிண்டா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எரிவாயு சிலிண்டா் விநியோகத்தில் முன்னேற்றம் ஏற்படுமா என்பதை கண்காணித்து வருவதாக இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. எனவே, வணிகா்கள் தங்கள் தேவைக்கான மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறும் அந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

தேநீா் கடைகள் மூடல்: வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டா் தட்டுப்பாட்டு காரணமாக, செவ்வாய்க்கிழமை சென்னையில் பல இடங்களில் தேநீா் கடைகள், சிற்றுண்டி கடைகள் மூடப்பட்டன. சென்னையில் பல ஹோட்டல்களில் உணவு தயாரிப்புமு குறைக்கப்பட்டுள்ளது. 2 நாள்களில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டா் விநியோகம் சீரடையாவிட்டால் தமிழகத்தில் பெரும்பாலன உணவங்கள் மூடபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல் சங்க உரியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

சிலிண்டா் முன்பதிவு சேவை முடக்கம்: வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டா் முன் பதிவு செய்ய முற்பட்டபோது எண்ணெய் நிறுவனங்களின் முன்பதிவு செய்யும் சேவை முடங்கியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →