முகப்பு
தமிழ்நாடு

கட்சி விளம்பரங்களுடன் விற்பனையை சூடேற்றும் தவெக! விசில் சப்தம் கேட்கிறதா?

இ-வணிக நிறுவனங்களில், கட்சி விளம்பரங்களுடன் வரும் பொருள்களின் விற்பனையை சூடேற்றும் தவெக

Updated On : 26 மார்ச், 2026 at 9:41 AM
கட்சியினருடன் தவெக தலைவர் விஜய் - DPS
பகிர்:

பொதுவாகவே தேர்தல் அறிவிப்புக்கு முன்பே, தேர்தல் பரபரப்பு தமிழகத்தை ஆக்ரமித்திருந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

தேர்தல் காலத்தில் கட்சித் தலைவர்கள், சின்னம் அச்சிடப்பட்ட பொருள்களின் விற்பனை உச்சத்தை அடைவது, வரலாற்றில் புதிதல்ல. ஆனால், 2026 தேர்தலில் ஒரு புதிய மாற்றம் என்னவென்றால், எப்போதும் மாநிலத்தின் ஆளுங்கட்சி மற்றும் முன்னணின் கட்சிகளின் பொருள்கள் அதிகம் விற்பனையாகும் நிலையில், தற்போது அதிகம் விற்கப்படும் பொருள்களின் வகையிலும், அதற்கான தேவையிலும் ஒரு மாற்றம் வந்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணம், நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜய்யின் தவெக கட்சியும், அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருப்பதும், இளைஞர்களே அதிகமாக இ-வணிக நிறுவனங்களிலிருந்து பொருள்களை வாங்குவது என்பதும் காரணங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.