முகப்பு
தமிழ்நாடு

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியது குறித்து...

வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் - எக்ஸ்
பகிர்:

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், இன்று (மே 1) அதிகாலையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் இருந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் புறப்பட்ட அழகர், அதிகாலை பச்சை பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார்.

அப்போது பக்தர்கள் முன்பு தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. மலர்களைத் தூவி 'கோவிந்தா... கோவிந்தா...' என்ற முழக்கத்துடன் அழகரை பக்தர்கள் வரவேற்றனர்.

Advertisement

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தா்கள் திரண்டு வந்ததுள்ளதால் மதுரை மாநகரின் அனைத்து வீதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மதுரை மாநகா் முழுமையும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பியியுள்ளது. லட்சக்கணக்கானோரின் வருகையால் மதுரை மாநகரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்தது.

ஆயிரக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு, பக்தா்கள் கூட்டத்தை நெறிப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.