யார் இந்த ராதான் பண்டிட்? விஜய்யின் இமாலய வெற்றியை முன்கணித்தவர்?
தவெக தலைவர் விஜய்யின் ஜாதகத்தை சுனாமி ஜாதகம் என வர்ணிக்கும் ஜோதிடர் ராதான் பண்டிட் யார்?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தவெக 108 இடங்களில் வெற்றி பெற்ற தனிப்பெரும்கட்சியாக உருவெடுக்கும் என்று முந்தைய நாளே விஜய்யிடம் யாராவது சொல்லியிருந்தாலும் நம்பியிருப்பாரா என்று தெரியவில்லை. ஆனால், இதனை பல நாள்களுக்கு முன்பே கணித்துச் சொல்லியிருப்பவர் ஜோதிடர் ராதான் பண்டிட் என்று கூறப்படுகிறது.
பொதுவாக அரசியல் வரலாறு என்பது பல அதிரடி மாற்றங்களையும் வீழ்ச்சிகளையும் இமாலய வெற்றிகளையும் பார்த்திருந்தாலும், இந்த மகத்தான வெற்றியின் பின்னணியில் ஒரு நம்பிக்கை மட்டுமே இருந்துள்ளது.
மே 4ஆம் தேதி வெளியான 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டின் அரசியல் வரைபடைத்தையே ஒட்டுமொத்தமாக மாற்றியிருக்கிறது. இது வாக்களித்த வாக்காளர்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கலாம். ஆனால், ஒருவருக்கு மட்டும் ஆச்சரியமாக இருந்திருக்காது. காரணம். அவர்தான் இதனை முன் கணித்து சொன்னதே. ராதான் பண்டிட், 40 ஆண்டுகளாக ஜோதிடம் மற்றும் எண் ஜோதிடத்தில் நிபுணத்துவம் பெற்றவர். நடிகர் விஜய் தேர்தலில் போட்டியிட்டு மகத்தான வெற்றியை பெறுவார் என்று கணித்துச் சொல்லியிருந்தார்.
Advertisement
இவரது ஏராளமான விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் அவர் ஒன்றைக் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது விஜய்யின் ஜாதகம் ஒரு சுனாமி ஜாதகம் என்று வர்ணித்திருக்கிறார்.