தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி!
தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியதைப் பற்றி...
தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
திரைப்பட தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. செளத்ரி, தனது சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூருக்குச் சென்றுகொண்டிருந்தபோது காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் நேற்று (மே 5) பலியானார்.
1988 ஆம் ஆண்டு அடிபாபம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 1990 ஆம் ஆண்டு புது வசந்தம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் ஆர்.பி. சௌத்ரி. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 99 திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
Advertisement
தொடர்ந்து நாட்டாமை, பூவே உனக்காக, ஆனந்தம், சேரன் பாண்டியன், லவ் டுடே, நீ வருவாய் என, புன்னகை தேசம் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களைக் கொடுத்திருந்தார்.
1996 ஆம் ஆண்டு வெளியான நடிகர் விஜய்யின் பூவே உனக்காக படத்தை தயாரித்திருந்த ஆர்.பி. சௌத்ரி, அதனைத்தொடர்ந்து லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி, ஜில்லா போன்ற படங்களையும் தயாரித்திருந்தார்.
நேற்று உதய்பூரில் விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது உடல் இன்று சென்னை கொண்டு வரப்பட்டு சென்னையில் உள்ள அவரின் இல்லத்தில், அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் பலர் ஆர்.பி. செளத்ரி உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர்கள் சிவகுமார், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆர்.பி. சௌத்ரியின் வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து ஆர்.பி. சௌத்ரியின் மகன்களான நடிகர்கள் ஜீவா, ஜித்தன் ரமேஷ் ஆகியோருக்கு ஆறுதலும் தெரிவித்தார்.