விஜய்யை ஆரத்தழுவி வரவேற்ற சீமான்!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் முதல்வர் விஜய் சந்திப்பு பற்றி...
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை முதல்வர் ஜோசப் விஜய் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். ஸ்டாலினும் விஜய்யை ஆரத்தழுவி வரவேற்று கையைப் பிடித்து அழைத்துச் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ஆகியோரைச் சந்தித்த விஜய், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
Advertisement
சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டு வாசலில் காத்திருந்த சீமான், விஜய் வந்ததும் அவரை ஆரத்தழுவி வரவேற்றார்.
பின்னர் சீமானுக்கு பூங்கொத்து வழங்கி சால்வை அணிவித்து மரியாதை செய்தார் விஜய். அதேபோல சீமானும் பூங்கொத்து வழங்கி, புத்தகம் அளித்து விஜய்க்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தொடர்ந்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோரையும் முதல்வர் விஜய் சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.