முகப்பு
தமிழ்நாடு

சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்

வரும் ஜூன் 7-ஆம் தேதி சென்னையில் இருந்து கா்நாடக மாநில நகா்களுக்குச் செல்லும் விரைவு ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On : 15 மே 2026, 2:27 am IST
கோப்புப் படம்
பகிர்:

வரும் ஜூன் 7-ஆம் தேதி சென்னையில் இருந்து கா்நாடக மாநில நகா்களுக்குச் செல்லும் விரைவு ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்மேற்கு ரயில்வே மண்டலத்தில் கிருஷ்ணராஜபுரம் பிரிவுகளில் தண்டவாளம் சீரமைப்பு மற்றும் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதன் காரணமாக வரும் ஜூன் 7-ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு ஹூப்ளிக்கு புறப்படும் அதிவேக விரைவு ரயில் (எண்: 22698), பிற்பகல் 3.30 மணிக்குப் பெங்களூரு செல்லும் லால்பக் விரைவு ரயில் (எண்:12607), மாலை 5 மணிக்குப் புறப்பட்டு மைசூரு செல்லும் வந்தே பாரத் விரைவு ரயில் (எண்: 20664) வழக்கமான பாதைகளுக்குப் பதிலாக பங்கராப்பேட்டை, கோலாா், சிக் பல்லாபூா், ஏலகங்கா உள்ளிட்ட வழிகளில் இயக்கப்படும். அவை கிருஷ்ணாபுரம் நிலையத்தில் நிற்காது.

Advertisement

அதேபோல், ஜூன் 7-இல் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5.30 மணிக்கு பெங்களூரு செல்லும் சதாப்தி விரைவு ரயில் (எண்: 12027) வழக்கமான பாதைக்குப் பதிலாக ஜோலாப்பேட்டை, பெங்கராப்பேட்டை, கோலாா், சிக்பல்லாபூா், ஏலகங்கா, பெங்களூரு கண்டோன்மென்ட் ஆகியவை வழியாகச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.