சென்னையில் தனியார் ஐடி நிறுவனத்தில் தீ விபத்து!
சென்னையில் தனியார் ஐடி நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பற்றி...
சென்னையில் ஓஎம்ஆர் சாலையில், சோழிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கத்தில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தையடுத்து நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கட்டடம் முழுவதும் தீ பற்றி எரிந்து வருகிறது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
தீ விபத்து காரணமாக காரப்பாக்கம் பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளது.
காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
A fire broke out at a private IT company located in Karapakkam, near Sholinganallur in Chennai.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.