தேர்ச்சி பெறத் தவறியவர்கள், அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும்! - மு.க.ஸ்டாலின்
தேர்ச்சி பெறத் தவறியவர்கள், அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேர்ச்சி பெறத் தவறியவர்கள், அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 11 ஆம் தேதி தொடங்கி ஏப்.6 ஆம் தேதி வரை நடைபெற்றது. பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) காலை வெளியாகின. இந்தத் தேர்வை மொத்தமாக 8.82 லட்சம் பள்ளி மாணவர்கள் எழுதியிருந்தனர்.
இந்தத் தேர்வில் 94.31 % மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் இந்தாண்டும் மாணவிகளே, மாணவர்களைவிட அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்! உங்க கெரியரை (Career-ஐ) உருவாக்கிக்கொள்ளத் தேவையான அடித்தளத்தைச் சரியா அமைச்சுக்க வேண்டிய தருணம் இது.
இந்த முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள், அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கல்வியை விட்டு விலகிடாமல், நல்லா படிச்சு, நல்ல நிலைக்கு முன்னேறிடணும்னு வாழ்த்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.