திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் இயக்குநர் மாரி செல்வராஜ் சந்திப்பு!
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை இயக்குநர் மாரி செல்வராஜ் சந்தித்துள்ளது குறித்து...
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலினை அவருடைய இல்லத்தில் தமிழ்த் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் இன்று (மே 16) நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினையும் இயக்குநர் மாரி செல்வராஜ் சந்தித்து உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதுபற்றி, இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“பேரன்பின் நிமித்தமாக முன்னால் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க. ஸ்டாலினை இன்று சந்தித்து எனது மரியாதையையும் பிரியத்தையும் பகிர்ந்துகொண்டேன்.
சந்திப்பின் போது உடனிருந்த தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, மாநிலங்களவை உறுப்பினரும், மநீம கட்சித் தலைவருமான கமல்ஹாசன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது.
Film director Mari Selvaraj met DMK President M.K. Stalin in person and held a discussion.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.