முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் விஜய் தலைமையில் சென்னையில் 7 அமைச்சர்கள்!

முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் தலைநகர் சென்னையில் 7 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளதைப் பற்றி...

முதல்வர் விஜய்யுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த், நிர்மல்குமார், ராஜ்மோகன், டிகே பிரபு, வெங்கட்ரமணன். - படம்: எக்ஸ்.
பகிர்:

தமிழ்நாடு அமைச்சரவையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் தலைநகர் சென்னையில் 7 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டின் முதல்வராக ஜோசப் சி. விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் கடந்த மே 10 ஆம் தேதி  பதவியேற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, தவெக கூட்டணி அரசின் அமைச்சரவை விரிவாக்கம் வியாழக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தமிழ்நாடு மக்கள் மாளிகை இன்று (மே 21) காலை வெளியிட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தலைநகர் சென்னையில் முதல்வர் விஜய் உள்பட மொத்தமாக 7 பேர் அமைச்சர்களாக இடம்பெற்றுள்ளனர்.

பெரம்பூர் தொகுதியில் இருந்து முதல்வர் விஜய், வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா, தி.நகரில் என். ஆனந்த், மைலாப்பூரில் இருந்து வெங்கட்ரமணன், எழும்பூரில் இருந்து ராஜ்மோகன், ஆர்.கே. நகரில் இருந்து மரிய வில்சன், வேளச்சேரியில் இருந்து குமார் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர்.

முன்னதாக, சட்டப்பேரவைத்தலைவராக ஆயிரம் விளக்குத் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த ஜேசிடி பிரபாகர், அரசுத் தலைமைக் கொறடாவாக விருகம்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த சபரிநாதன் இருவரும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

கடந்த திமுக ஆட்சியில் தலைநகர் சென்னையில், அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மட்டும் அமைச்சர்களாக இருந்த நிலையில், தற்போது 7 அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The Tamil Nadu Cabinet, led by Chief Minister C. Joseph Vijay, comprises seven ministers based in the capital city of Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.