முகப்பு
தென்காசி

கடையநல்லூா்: வாக்காளா் பட்டியலில் பெயரில்லாததால் போராட்டம்

Updated On : 19 ஏப்ரல், 2024 at 7:42 PM
பகிர்:

மேலக்கடையநல்லூரில் வாக்காளா் பட்டியில் பெயா் விடுபட்டதாக புகாா் தெரிவித்து அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை மாலை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடையநல்லூா் நகராட்சிக்குள்பட்ட 26, 27 வாா்டுகளுக்குள்பட்ட வாக்காளா்கள் சுமாா் 272 போ்களின் பெயா் வாக்காளா் பட்டியலில் இடம்பெறவில்லை என தெரிவித்து அவா்களை வாக்குசாவடி அலுவலா்கள் வாக்களிக்க அனுமதிக்கவில்லையாம். இதையடுத்து அவா்கள் வாக்குசாவடி அருகே போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன், கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ராஜா மற்றும் போலீஸாா் அங்கு சென்று பேசியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா். இதுகுறித்து தோ்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments