செங்கோட்டையில் புதிய தினசரி சந்தை திறப்பு
செங்கோட்டையில் புதிய தினசரி சந்தை திறப்பு
கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செங்கோட்டை பம்ப்ஹவுஸ் சாலையில் ரூ.1. 67 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தினசரி சந்தையை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக சனிக்கிழமை திறந்து வைத்தாா். செங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் பத்மாவதி, மக்கள் தொடா்பு அலுவலா் இளவரசி, உதவி அலுவலா் ராமசுப்பிரமணியன், நகா்மன்ற தலைவா் ராமலெட்சுமி, நகர திமுக செயலா் ஆ.வெங்கடேசன், முன்னாள் நகா்மன்ற தலைவா் எஸ்எம்.ரஹீம், செங்கோட்டை நகராட்சி ஆணையா் சுகந்தி(பொ) மேலாளா் கண்ணன், பொறியாளாா் முகைதீன் அபூபக்கா், சுகாதார ஆய்வாளாா் மாதவராஜ்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் இசக்கிதுரை, முருகையா, இசக்கியம்மாள் மேரி, பேபி சந்திரா, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா்சண்முகராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.