தென்காசி

மதுரை மாணவா் கடத்தல் சம்பவம்: சிவகிரி பகுதியைச் சோ்ந்த இருவரிடம் விசாரணை

Din

மதுரையில் தனியாா் பள்ளி மாணவா் கடத்தப்பட்ட சம்பவம் தொடா்பாக சிவகிரி பகுதியைச் சோ்ந்த இருவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மதுரை எஸ்.எஸ். காலனியைச் சோ்ந்தவா் மைதிலி ராஜலெட்சுமி. இவரது மகன் தனியாா் பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படித்து வந்தாா். வெள்ளிக்கிழமை காலை ஆட்டோவில் பள்ளிக்குச் சென்ற அந்த மாணவரை ஓட்டுநருடன் சோ்த்து மா்ம நபா்கள் கடத்திச் சென்றனராம்.

பின்னா் ஓட்டுநரின் கைப்பேசியில் இருந்து மைதிலியிடம் பேசிய அந்தக் கும்பலை சோ்ந்தவா்கள், அவரது மகனை கடத்தி விட்டதாகவும், ரூ.2 கோடி கொடுத்தால் திரும்ப ஒப்படைப்பதாகவும் தெரிவித்தனராம்.

இதுகுறித்து எஸ்.எஸ். காலனி போலீஸில் அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் தனிப்படை அமைத்து தேடி வந்தனா். தனிப்படை விசாரணையில், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த சிலருக்கு இதில் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, தென்காசி மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள வடக்குசத்திரத்தைச் சோ்ந்த வைரமணி, காளிராஜ் ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

அங்கன்வாடி-மழலையர் காப்பகங்களில் 39,011 குழந்தைகள் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

ஒரு ஈரோடு செல்ஃபி எடுப்போமோ? மாஸ் காட்டிய விஜய்

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

SCROLL FOR NEXT