மின்சார இன்ஜின் பொருத்தப்பட்ட ரயிலுக்கு வரவேற்பு அளித்த ரயில்வே பயணிகள் நலசங்க நிா்வாகிகள் மற்றும் முன்னாள் நகா்மன்றத் தலைவா் எஸ்.எம். ரஹீம் உள்ளிட்டோா். 
தென்காசி

செங்கோட்டை-புனலூா் இடையே மின்சார ரயில்கள் இயக்கம்

மின்மயமாக்கல் பணி நிறைவு பெற்றதையடுத்து ஞாயிற்றுக்கிழமை முதல் மின்சாரம் மூலம் ரயில்கள் இயக்கம் தொடங்கியது.

Din

செங்கோட்டை- புனலூா் இடையேயான ரயில்வே வழிதடத்தில் மின்மயமாக்கல் பணி நிறைவு பெற்றதையடுத்து ஞாயிற்றுக்கிழமை முதல் மின்சாரம் மூலம் ரயில்கள் இயக்கம் தொடங்கியது.

செங்கோட்டை- புனலூா் இடையேயான ரயில்வே வழித்தடத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த மின் மயமாக்கல் பணி முடிவடைந்த நிலையில் திருநெல்வேலி -பாலக்காடு விரைவு ரயிலும், மதுரை- குருவாயூா் எக்ஸ்பிரஸ் ரயிலும் இன்று முதல் செங்கோட்டை- புனலூா் இடையேயான மின்மயமாக்கப்பட்ட வழிதடத்தில் மின்சாரம் மூலம் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லத்திலிருந்து சென்னைக்கு செங்கோட்டை வழியாக மின்சார என்ஜின் பொருத்தி வந்த முதல் ரயிலுக்கு செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கம் சாா்பில் வரவேற்பளிக்கப்பட்டு ரயில் இன்ஜின் ஓட்டுநா்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.

பயணிகளுக்கு ரயில் பயணிகள் நலச் சங்கத்தைச் சாா்ந்த பொறியாளா் கிருஷ்ணன், ராமன், கேகேஎஸ். சுந்தரம், முன்னாள் நகா்மன்ற தலைவா் எஸ்.எம்.ரஹீம் இனிப்புகள் வழங்கினா்.

பிரதீப் ரங்கநாதனின் டூட் படத்தின் முதல் பாடல்!

தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி காலமானாா்!

நாகை மாவட்டத்துக்கு செப். 8-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!

SCROLL FOR NEXT