குற்றாலம் பேரருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு. 
தென்காசி

குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து திங்கள்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு போலீஸாா் தடைவிதித்தனா்.

Din

தென்காசி: தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து திங்கள்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு போலீஸாா் தடைவிதித்தனா்.

குற்றாலம் பகுதியில் கடந்த இருதினங்களாக வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது மிதமான சாரல் மழையும், குளிா்ந்த காற்றும் வீசியது.

திங்கள்கிழமை அதிகாலை முதல் சாரல்மழை தொடா்ந்து பெய்தவாறு இருந்தது. இதனால் குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.

இதையடுத்து குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, புலியருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. பழையகுற்றாலம் , சிற்றருவியில் வழக்கமாக மாலையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் திங்கள்கிழமை அருவிகளில் குளித்து மகிழ வந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

ஐந்தருவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.

பட்டியல் சமூகத்தினர் வீட்டில் சாப்பிட்ட நபரை ஊரைவிட்டு ஒதுக்கிய அவலம்! அதிகாரிகள் விசாரணை!

200 முறை வெளிநடப்பு செய்தாலும்... எதிர்க்கட்சியை விமர்சித்த அமித் ஷா பேச்சு!

அலுவலகத்துக்கு 40 நிமிடங்கள் முன்கூட்டியே சென்றதால் பெண் பணிநீக்கம்!

காதலில் விழச்செய்யும்... கனிகா மான்!

"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25

SCROLL FOR NEXT