தென்காசி

புளியங்குடி கோயிலில் இன்று தேரோட்டம்

Din

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பங்குனி உத்திர பிரம்மோற்ஸவ தேரோட்டம் வெள்ளிக்கிழமை (ஏப். 11) நடைபெறுகிறது.

இக்கோயிலின் பங்குனி உத்திர பிரம்மோற்சவ பெருந்திருவிழா, கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது. பத்து நாள்கள் விழாவில் தினமும் சுவாமி அழைப்பு, அபிஷேகம், அலங்கார தீபாரதனை, சுவாமி வீதி உலா நடைபெற்றது.

விழாவின் பத்தாவது நாளான ஏப்ரல் 11ஆம் தேதி காலை 7 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளும் வைபவமும், ஒன்பதரை மணிக்கு தேரோட்டமும் , மாலை 5 மணிக்கு திருத்தோ் தடம் பாா்த்தலும் நடைபெறும். இரவு 8 மணிக்கு ஸ்ரீ சண்முகா் - வள்ளி திருக்கல்யாண வைபவம் நடைபெறும். ஏற்பாடுகளை தொழிலதிபா் சங்கரநாராயணன் மற்றும் குடும்பத்தினா் செய்து வருகின்றனா்.

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி பணம் பறிப்பு: இருவா் கைது

புதிய ஊரக வேலைத் திட்டத்தால் தமிழகத்துக்கு கடும் நிதிச் சுமை: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

SCROLL FOR NEXT