விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் கடையநல்லூரில் அம்பேத்கா் நினைவு தினத்தையொட்டி, அலங்கரிக்கப்பட்ட அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தென்காசி மேற்கு மாவட்ட செயலா் ஜான் தாமஸ் தலைமையில், நகர செயலா் பாக்கியநாதன் , மாவட்ட செய்தி தொடா்பாளா் இசக்கிபாண்டியன் ஆகியோா் முன்னிலையில் கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.
இதில், பாலமுருகன், ஜாகீா்உசேன், முருகன், நடராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் கலந்து கொண்டனா்.