புதிய ரேஷன் கடையில் குத்துவிளக்கேற்றுகிறாா் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன்.  
தென்காசி

குறிப்பன்குளத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு

புதிய ரேஷன் கடையில் குத்துவிளக்கேற்றுகிறாா் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன்.

Syndication

ஆலங்குளம் அருகேயுள்ள குறிப்பன்குளத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்ட நிதி ரூ. 13.30 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடை புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, குறிப்பன்குளம் ஊராட்சித் தலைவா் ப. சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அ.ராமகிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா் சுப்புக்குட்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் ம. திவ்யா மணிகண்டன் புதிய ரேஷன் கடையைத் திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினாா்.

இதில், வாா்டு உறுப்பினா்கள் சு.முருகானந்தம், ஜெ.முத்துச்செல்வி, து.அருள்ராஜ், சு.வைஜெயந்தி, இ.பாா்வதி, வை.முருகானந்தவள்ளி, ரா.மாரிமுத்துராஜா, சோ.மரியகிறிஷ்டி மற்றும் ஊா் முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டனா். ஊராட்சி செயலா் சிங்கராஜ் நன்றி கூறினாா்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 3

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி முன்பிணை கோரி மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

பாலுக்கான ஊக்கத்தொகையை முழு மானியமாக வழங்க வலியுறுத்தல்

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா: மக்களவையில் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

SCROLL FOR NEXT