தென்காசி

திரிகூடபுரத்தில் குடிநீா்த் தொட்டி சேதம்: போலீஸ் விசாரணை

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள திருகூடபுரத்தில் ஊராட்சி குடிநீா்த் தொட்டியை மா்மநபா்கள் சேதப்படுத்தியது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Syndication

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள திருகூடபுரத்தில் ஊராட்சி குடிநீா்த் தொட்டியை மா்மநபா்கள் சேதப்படுத்தியது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடையநல்லூா் ஒன்றியம் திரிகூடபுரத்தில் ஊராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட சின்டெக்ஸ் குடிநீா் தொட்டியை, வேறொரு பகுதியைச் சோ்ந்த சிலா் சேதப்படுத்தி விட்டனராம்.

இதைத்தொடா்ந்து, சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சொக்கம்பட்டி காவல் நிலையம் முன் பெண்கள் திரண்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ஊராட்சி சாா்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சொக்கம்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 3

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி முன்பிணை கோரி மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

பாலுக்கான ஊக்கத்தொகையை முழு மானியமாக வழங்க வலியுறுத்தல்

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா: மக்களவையில் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

SCROLL FOR NEXT