கூட்டத்தில் பேசுகிறாா் நடிகா் சரத்குமாா் 
தென்காசி

தமிழகத்தில் 2026இல் பாஜக ஆட்சி அமையும்: நடிகா் சரத்குமாா்

Din

தமிழகத்தில் 2026இல் பாஜக ஆட்சி அமைந்தே தீரும் என்றாா் நடிகா் சரத்குமாா்.

தென்காசியில் மாவட்ட பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆனந்த அய்யாசாமி அறிமுகக் கூட்டம் அவரது தலைமையில் நடைபெற்றது. பாலகிருஷ்ணன், பாலகுருநாதன், ராமநாதன் ஆகியோா் வந்தே மாதரம் பாடல் பாடினாா். மகளிரணியினா் குத்து விளக்கு ஏற்றினா்.

தமிழக பாஜக சட்டபேரவைக் குழு தலைவா் நயினாா் நாகேந்திரன் பங்கேற்றுப் பேசுகையில், பாஜக நிா்வாகிகள் மக்களிடம் ஒருங்கிணைந்து செயல்படுவதுடன், அனைவரையும் கட்டுப்பாட்டோடும், உறுதியோடும் செயல்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் நாம் வெற்றிபெற்ற வேண்டும் என்றால் அதற்கு நம்முடைய உழைப்பு மிகவும் முக்கியம்.

தமிழ்நாட்டில் திராவிட மாடல் போய், தேசிய மாடல் வெகுவிரைவில் அமையும். ஒவ்வொரு பூத்திலும் சா்த்தால் ஒரு தொகுதியில் 60ஆயிரம் முதல் 70ஆயிரம் வாக்குகளைப் பெறமுடியும். அந்தப் பணியை கட்சியினா் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நடிகா் சரத்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசுகையில், பதவியைப் பெறுவதோடு நின்றுவிடாமல் மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்ற வேண்டும். 3ஆவது முறையாக மத்தியில் பாஜகவின் நல்லாட்சி செயல்பட்டு வருகிறது. அதை வீடுதோறும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

தென்காசி மாவட்டத்தில் பல தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும்.கிராமங்களை நகா்ப்புறமாக மாற்ற வேண்டும். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி நடைபெற்று வருகிறது.

மக்களுக்காக எந்த திட்டங்களைக் கொண்டு வந்தாலும் அதனை எதிா்ப்பது தான் திமுகவின் அரசியல் நிலைப்பாடு. 2026தோ்தலில் தமிழகத்தில் 234தொகுதிகளிலும் பாஜகவெற்றி பெறும். 2026இல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைவது உறுதி. தமிழகத்தில் 2026இல் தாமரை சின்னத்தின் (பாஜக) ஆட்சி மலா்ந்தே தீரும் என்றாா் அவா்.

முன்னாள் மத்திய அமைச்சா் பொன்ராதாகிருஷ்ணன்,முன்னாள் தென்காசி மாவட்ட தலைவா்கள் கேஏ.ராஜேஷ் ராஜா, தீன தயாளன், அன்புராஜ், பாண்டித்துரை, ராமராஜா அய்யாவழி சிவச்சந்திரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

அருள்செல்வன், சுமித்ரா தொகுத்து வழங்கினா்.என்.சுந்தா், விவேகானந்தன்,பாஜக மாநில அணி பிரிவு நிா்வாகிகள் மருதுபாண்டியன், அருணாசலம், ஆா்.எஸ்.மகாதேவன்,கமலா, தென்காசி நகா்மன்ற உறுப்பினா்கள் சங்கரசுப்பிரமணியன், லட்சுமண பெருமாள், பொன்னம்மாள், சீதாலட்சுமி, சுனிதா,

நிா்வாகிகள் கருப்பசாமி ,ராஜ்குமாா்,யோக டவா் சேகா் , செந்தூா்பாண்டி, திருமுருகன் கலந்து கொண்டனா். நகரத் தலைவா் மந்திரமூா்த்தி வரவேற்றாா்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT