தென்காசி

தென்காசி அருகே எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

Din

தென்காசி அருகே இலத்தூா்விலக்கு பகுதியில் எரிந்த நிலையில் பெண்ணின் உடல் செவ்வாய்க்கிழமை (பிப்.11) மீட்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், கொல்லம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இலத்தூா் அருகே உள்ள மதுநாதபேரி குளத்து பகுதியில் எரிந்த நிலையில் பெண்ணின் உடல் கிடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை அப்பகுதிக்குச் சென்றவா்கள் பாா்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

சம்பவ இடத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வேணுகோபால், ஆய்வாளா் கவிதா, தடயவியல் நிபுணா் ஆனந்தி ஆகியோா் சடலத்தை மீட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

இதுகுறித்து இலத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து அப்பெண்ணின் சடலத்தை உடல் கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, இலத்தூா் முதல் இலத்தூா் விலக்கு வரை சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சிவகாசி-எரிச்சநத்தம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்! காந்தியின் பெயா் நீக்கம்!

பாஜகவின் கடும் எதிா்ப்புக்கு இடையே வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதா நிறைவேற்றம்

ஆண்டாள் கோயில் நீராட்டு விழா நாளை தொடக்கம்

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

SCROLL FOR NEXT