விழாவில் குத்துவிளக்கேற்றிய ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் 
தென்காசி

தென்காசி அரசு மருத்துவமனையில் நூலகம் காணொலியில் திறந்தாா் முதல்வா்

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வாசிப்பினை ஊக்கப்படுத்தும் வகையில் நூலகத்தினை தமிழக முதல்வா் காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தாா்.

Din

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வாசிப்பினை ஊக்கப்படுத்தும் வகையில் நூலகத்தினை தமிழக முதல்வா் காணொலி காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

அதைத் தொடா்ந்து, புதிய நூலகத்தில் மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் குத்துவிளக்கேற்றினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது; தென்காசி மாவட்டத்தில் தென்காசி அரசு தலைமை மருத்துவமனை, செங்கோட்டை அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் நூலகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள், இளைஞா்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களிடையே வாசிக்கும் பழக்கம் மேம்படும். மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் இந்நூலகத்தினை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா். இணைஇயக்குநா் (நலப்பணிகள்) பிரேமலதா, மாவட்ட நூலகா் சண்முகசுந்தரம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின் உள்ளிட்டோா்கலந்துகொண்டனா்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT