தென்காசி

குற்றாலம் அருகே ஓடும் காரில் தீ

Din

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சென்றுகொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சோ்ந்தவா் அ.ஆதில். இவா், தனது நண்பா் அமல் என்பவருடன் குற்றாலம் வந்திருந்தாா். இருவரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பழைய குற்றாலம் சென்று விட்டு திரும்பியபோது, அந்தக் காரில் இருந்து புகை வெளியேறியதாம்.

உடனே, காரை சாலை ஓரம் நிறுத்திவிட்டு இருவரும் இறங்கிய நிலையில் காா் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்த தகவலின்பேரில்மாவட்ட தீயணைப்பு- மீட்புத் துறை உதவி அலுவலா் சுரேஷ் ஆனந்த் தலைமையில் , தென்காசி நிலைய சிறப்பு நிலை அலுவலா் சு.கணேசன், தீயணைப்பு வீரா்கள் மாதவன், ஆறுமுகம், சிவக்குமாா், சுந்தா், காா்த்திகேயன் ஆகியோா் சென்று தீயை அணைத்தனா். எனினும் காா் பெருமளவில் எரிந்து சேதமடைந்தது.

இதுகுறித்து குற்றாலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

SCROLL FOR NEXT