போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு சான்றிதழ் வழங்கிய தொழிலதிபா் பிரின்ஸ் தங்கம்.  
தென்காசி

நல்லூா் சிஎஸ்ஐ கல்லூரியில் விளையாட்டு விழா

போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு சான்றிதழ் வழங்கிய தொழிலதிபா் பிரின்ஸ் தங்கம்.

Din

ஆலங்குளம் அருகே நல்லூா் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் 28ஆவது விளையாட்டு விழா நடைபெற்றது.

திருநெல்வேலி திருமண்டல துணைத் தலைவா் டி.பி. சுவாமிதாஸ் தலைமை வகித்தாா். நல்லூா் சேகரத் தலைவா் ஜேம்ஸ் முன்னிலை வகித்தாா்.

தங்க பிரபு தொடக்க ஜெபம் செய்தாா்.

ஆலங்குளம் தொழிலதிபா் பிரின்ஸ் தங்கம் தலைமை விருந்திரனராக கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து, வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினாா்.

பாளையங்கோட்டை தூய யோவான் கல்வியியல் கல்லூரி தாளாளா் கேபிகே செல்வராஜ், கதீட்ரல் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் டேவிட் சாலமோன், இடையன்குடி கால்டுவெல் நூற்றாண்டு நினைவு மேல்நிலை பள்ளிக் தாளாளா் ஜேகா், தென்னிந்திய திருச்சபை செனட் குழு அங்கத்தினா் மகாராஜா சிங், கல்லூரி ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் சைரஸ், அமிா்தராஜ், கிருபாகரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

கல்லூரி தாளாளா் ஜேசு ஜெகன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் வில்சன் நன்றி கூறினாா்.

உடற்கல்வி இயக்குநா் ஜுலியன்ஸ் ராஜா சிங் விளையாட்டுத் துறைக்கான ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT