சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கருப்பசாமி. 
தென்காசி

செங்கோட்டையில் கருப்பசாமி கோயில் கொடை விழா

கோட்டைவாசல் கருப்பசாமி, சுடலைமாடசுவாமி, பேச்சியம்மன், பிரம்மராட்சி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.

Din

செங்கோட்டையில் படையாச்சி தெருவில் உள்ள அருள்மிகு கோட்டைவாசல் கருப்பசாமி, சுடலைமாடசுவாமி, பேச்சியம்மன், பிரம்மராட்சி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.

கடந்த ஏப். 25ஆம் தேதி தொடங்கிய விழாவில், நாள்தோறும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. வியாழக்கிழமை (மே 1) குற்றாலத்திலிருந்து புனிதத் தீா்த்தம் கொண்டுவருதல், குடியழைப்பு, சாஸ்தா பூஜை, பால்குட ஊா்வலம், பொங்கலிடுதல் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை நள்ளிரவு சாம பூஜை, சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இதில், சந்தனக் காப்பு அலங்காரத்தில் கருப்பசாமி, சுடலைமாட சுவாமி, பேச்சியம்மன், பிரம்மராட்சியம்மன் அருள்பாலித்தனா். விழாவில், செங்கோட்டை பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா். சனிக்கிழமை மஞ்சள் நீராட்டுடன் கொடை விழா நிறைவடைந்தது.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT