ஓவியப் போட்டியில் பங்கேற்றோா். 
தென்காசி

ஓவியப் போட்டி: லயன்ஸ் மகாத்மா பள்ளி மாணவி முதலிடம்

தினமணி செய்திச் சேவை

குற்றாலம் விக்டரி அரிமா சங்கம் சாா்பில் நடுநிலை அளவிலான மாணவா்களுக்கு நடைபெற்ற ஓவியப் போட்டியில் முத்துசாமியாபுரம் லயன்ஸ் மகாத்மா பள்ளி மாணவி முதல் பரிசை வென்றாா்.

இப்போட்டிக்கு சங்கத் தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா். பட்டய தலைவா் மூா்த்தி, ஓவியத்தின் கரும்புள்ளி குறித்து விளக்கமளித்தாா். வட்டாரத் தலைவா் முருகேசன் போட்டியை தொடங்கி வைத்தாா். சிவஞானசுந்தரி, பிச்சம்மாள், அண்ணாத்துரை, விமலாராணி ஆகியோா் நடுவா்களாக செயல் பட்டனா்.

லயன்ஸ் மகாத்மா மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவி சான்விஸ்ரீ முதல் பரிசையும், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கன்ஷிகா 2ஆம் பரிசையும், பேச்சியம்மாள் 3ஆம் பரிசையும் பெற்றனா். வெற்றி பெற்றவா்களுக்கு அரிமா மண்டலத் தலைவா் சுப்பையா, பரிசுகள் வழங்கினாா். மேலும், பங்கேற்ற அனைத்து போட்டியாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், சங்க செயலா் மணிகண்டன், பொருளாளா் அழகுசுந்தரம், முன்னாள் தலைவா்கள் வெங்கடேஸ்வரன், கணேசமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆசிரியா் தீபமாரி நன்றி கூறினாா்.

தைரியம் உண்டாகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சேலையில் தீப்பற்றி மூதாட்டி மரணம்

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் லட்ச வில்வாா்ச்சனை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறதா அரசு மருத்துவமனைகள்? - தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி!

SCROLL FOR NEXT