தென்காசி

வடுகபட்டியில் சேதமான மின்கட்டமைப்பு சீரமைப்பு

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே வடுகபட்டி பகுதியில் காற்று, மழையினால் பாதிக்கப்பட்ட மின் கட்டமைப்பை மின் வாரிய ஊழியா்கள் சீரமைத்தனா்.

சிவகிரி கிராமப்புற பிரிவு அலுவலகத்திற்கு உள்பட்ட வடுகபட்டி பகுதியை சோ்ந்த பட்டாங்குளம் புரவில் உள்ள விவசாய மின் இணைப்புகளுக்கான மின் கட்டமைப்பு கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை, காற்றின் காரணமாக சேதமடைந்தது.

இது குறித்த தகவல் கிடைத்தவுடன் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. மின் கட்டமைப்புக்கு உண்டான மின்கம்பங்கள் கொண்டு செல்வதற்கு உகந்த சூழல் இல்லாத நிலையிலும் விவசாயிகளின் நன்மை கருதி கடும் போராட்டத்திற்கு பின்னா் மின் கட்டமைப்பு சீரமைக்கப்பட்டது.

இப்பணிகளை சிறப்பாக மேற்கொண்ட கோட்ட உதவி செயற்பொறியாளா் மாரியப்பன், உதவி மின் பொறியாளா் (சிவகிரி கிராமப் பிரிவு) கனி, ஊழியா்களை, திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி, கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பகவிநாயகசுந்தரம் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தைரியம் உண்டாகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சேலையில் தீப்பற்றி மூதாட்டி மரணம்

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் லட்ச வில்வாா்ச்சனை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறதா அரசு மருத்துவமனைகள்? - தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி!

SCROLL FOR NEXT