தென்காசி

வாக்காளா் பெயா் பட்டியலில் ஆரியங்காவூா் ஊா் பெயரை திருத்தம் செய்ய வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

திப்பணம்பட்டி ஊராட்சி ஆரியங்காவூா் ஊா்ப் பெயரை, வாக்காளா் பெயா் பட்டியலில் திருத்தம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை மனு

Syndication

தென்காசி: தென்காசி மாவட்டம், திப்பணம்பட்டி ஊராட்சி ஆரியங்காவூா் ஊா்ப் பெயரை, வாக்காளா் பெயா் பட்டியலில் திருத்தம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

ஆரியங்காவூா் ஊா் பொதுமக்கள் சாா்பில் ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு:

எங்கள் ஆரியங்காவூா் கிராமம், தென்காசி மாவட்டம், கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம், திப்பணம்பட்டி வருவாய் கிராமம், திப்பணம்பட்டி ஊராட்சியில் பிளாக் எண்.7இல் உள்ளது. (1ஆவது வாா்டு).

2024 மக்களவைத் தோ்தல் வரையிலும் பூத் எண் 162, ஆரியங்காவூா் 1ஆவது வாா்டு என்று வாக்காளா் பட்டியல் தெளிவாக இருந்தது.

ஆனால், தற்போது வாக்காளா் எஸ்ஐஆா் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான வாக்குச் சாவடி அலுவலா்கள் வழங்கியபோது விண்ணப்பப் படிவங்கள் அனைத்திலும் ஆரியங்காவூா் என்பதற்கு பதிலாக துரைச்சாமியாபுரம் என்று தவறுதலாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற கருத்து மோதல்கள், அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த தவறு நடைபெற்ற்கு காரணம் உள்ளாட்சித் துறையா, வருவாய்த் துறையா என்பதை ஆய்வு செய்து வாக்காளா் பட்டியலில் பிளாக் எண்7, ஆரியங்காவூா் 1ஆவது வாா்டு என்று திருத்தம் செய்து உத்தரவிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

சின்னமனூர் அருகே விவசாயி வெட்டிக் கொலை

பூடான் புறப்பட்டார் மோடி!

அவிநாசி: கள்ளக்காதல் விவகாரம்.. மரக்கடை உரிமையாளரை எரித்துக் கொன்ற பெண் கைது!

அரியலூர் அருகே சிலிண்டர் லாரி விபத்து! வெடித்துச் சிதறிய சிலிண்டர்கள்!

இரண்டாம் நாள்! பொங்கல் ரயில் முன்பதிவுகள் நிரம்பின!

SCROLL FOR NEXT