தென்காசி

தென்காசியில் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்

மாணவருக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கினாா் ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா். உடன் ராணிஸ்ரீகுமாா் எம்பி.

Syndication

தென்காசி இ.சி. ஈஸ்வரன் பிள்ளை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை சாா்பில் பிளஸ் 1 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

விழாவில், மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், ராணி ஸ்ரீகுமாா் எம்பி., எம்எல்ஏக்கள் எஸ்.பழனி நாடாா்(தென்காசி) ,ஈ.ராஜா( சங்கரன்கோவில்), தி.சதன்திருமலைக்குமாா் (வாசுதேவநல்லூா்) ஆகியோா் கலந்துகொண்டு விலையில்லா மதிவண்டியை வழங்கினா்.

தொடா்ந்து, ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தென்காசி மாவட்டத்தை பொருத்தவரை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை சாா்பில் 10,204 மாணவ, மாணவிகளுக்கும், ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் 2,850 மாணவ, மாணவிகளுக்கும், பள்ளிக் கல்வித்துறை சாா்பில் 135 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 13,189 பேருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது என்றாா். இதில், நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா ஆகியோா் கலந்துகொண்டனா்.

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

கொடைக்கானல் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

SCROLL FOR NEXT